search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சங்கடஹர சதுர்த்தி"

    • மாலையில் மீண்டும் நீராடி, விநாயகர் வழிபாட்டில் ஈடுபடலாம்.
    • அதிகாலை நீராடி, விநாயகரை வழிபட்டு விரதத்தைத் தொடங்கலாம்.

    சங்கட ஹர சதுர்த்தி விரதம், விநாயகப் பெருமானுக்குரியது. விநாயகரை வழிபடுவது என்பது அனைத்துவிதமான பிரச்னைகளுக்குமான தீர்வை அளிப்பது. எளிதில் கடைப்பிடிக்க முடிவது. பிரச்னைகள் தீரப் பல வழிகளைத் தேடி அலைந்து கொண்டிருப்பவர்கள் கடைப்பிடித்துப் பயன்பெற வேண்டிய விரதம் இது.

    நாளை அதிகாலை நீராடி, விநாயகரை வழிபட்டு விரதத்தைத் தொடங்கலாம். உபவாசம் இருக்க முடிபவர்கள் நாள் முழுவதும் உண்ணா நோன்பிருந்து விரதமிருக்கலாம். இயலாதவர்கள் ஒருவேளை உணவு உண்டு விரதமிருக்கலாம். மாலையில் மீண்டும் நீராடி, விநாயகர் வழிபாட்டில் ஈடுபடலாம்.

    வீட்டில் விநாயகரை வழிபடுபவர்கள், ஏற்கெனவே வீட்டில் விநாயகர் விக்கிரகமோ படமோ இருந்தால் அதற்குப் பூஜைகள் செய்யலாம். இருந்தாலும் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து அதற்குப் பூஜை செய்து, அதற்குப் பின் படம் அல்லது விக்கிரகத்துக்குப் பூஜை செய்ய வேண்டும். விநாயகருக்குரிய அஷ்டோத்திரங்களைச் சொல்லி வழிபடலாம். இயலாதவர்கள், விநாயகர் அகவல் போன்ற நற்றமிழ் பாடல்களைப் பாடலாம். விநாயகரின் நாமங்களைச் சொல்லி அருகம்புல்லால் அர்ச்சனை செய்ய வேண்டும். விநாயகருக்கு எளிய நைவேத்தியங்களே பிரியம். தனியாகப் பிரசாதங்கள் செய்ய நேரம் வாய்க்காதவர்கள் பொரி, கடலை, வெல்லம் முதலியன வைத்து வழிபடலாம்.

    ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்பவர்கள், விநாயகருக்கு செய்யப்படும் அபிஷேக ஆராதனைகளைத் தரிசனம்செய்வது மிகவும் சிறப்பு மிக்கதாகும். விநாயகருக்கு செய்யப்படும் அபிஷேகங்களை பக்தியோடு தரிசனம் செய்தாலே மனக்கஷ்டங்கள் அத்தனையும் தீர்ந்துவிடும். விநாயகருக்கும் சந்திரனுக்கும் செய்யப்படும் தீபாராதனைகளைத் தரிசனம் செய்ய, நம் கஷ்டங்கள் எல்லாம் தீரும். தொடர்ந்து 9 சங்கடஹர சதுர்த்தி நாளில், விநாயகர் ஆலயம் சென்று வணங்கிவந்தால் சகல துன்பங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.

    சங்கடஹர சதுர்த்தி தினத்தில்தான், சந்திரனும் செவ்வாயும் விநாயகரை வழிபட்டு சகல நன்மைகளையும் அடைந்தனர். எனவே, ஜாதகத்தில் சந்திரன் மற்றும் செவ்வாய் பலம் குன்றியிருப்பவர்கள், கட்டாயம் சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டை மேற்கொள்ளவேண்டியது அவசியம்.

    அழகர்கோவில் மலை உச்சியில் சோலைமலை முருகன் கோவிலில் உள்ள வித்தக விநாயகர் சன்னதியில் கார்த்திகை மாத சங்கடஹர சதூர்த்தி பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது.
    அழகர்கோவில் மலை உச்சியில் சோலைமலை முருகன் கோவில் உள்ளது. இங்குள்ள வித்தக விநாயகர் சன்னதியில் கார்த்திகை மாத சங்கடஹர சதூர்த்தி பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது.

    அருகம்புல், சம்மங்கி, மல்லிகை, ரோஜா உள்ளிட்ட பல்வேறு மாலைகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி வணங்கினார்கள். மேலும் உற்சவர் சுவாமிக்கும், பூஜைகள் நடந்தது. மூலவர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, மற்றும் வேல்சன்னதியிலும் பூஜைகள் நடந்தது.

    இதில் ஏராளமான பக்தர்கள் நெய் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர்.
    சங்கடஹர சதுர்த்தியையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    நாகை காயாரோகண சாமி கோவில் முகப்பில் உள்ள நாகாபரண விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு சாமிக்கு மஞ்சள், திரவியம், மாப்பொடி, தேன், பால், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் ஏழைப் பிள்ளையார் கோவில், நடுக்கம் தீர்த்த விநாயகர் கோவில், நீலாயதாட்சியம்மன் கோவிலில் உள்ள, செங்கழுநீர் விநாயகர், விட்டவாசல் விநாயகர், நீலா மேலவீதியில் உள்ள சாபம் தீர்த்த விநாயகர், நாகூர் விருச்சிக விநாயகர், காடம்பாடி சாலமண் தோட்டத்தில் உள்ள செல்வ விநாயகர், மறைமலைநகரில் உள்ள நவசக்தி விநாயகர் உள்ளிட்ட விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

    வேதாரண்யம் அச்சம் தீர்த்த விநாயகருக்கு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. வேதாரண்யம் கற்பகவிநாயகர், கட்சுவான் முனிஸ்வரர் கோவிலில் உள்ள விநாயகர், இலக்கு அறிவித்த விநாயகர், களஞ்சியம் பிள்ளையார், சேது சாலையில் உள்ள சித்திவிநாயகர், மண்டபகுளம் கரையில் உள்ள சங்கடம் தீர்த்த விநாயகர், குரவப்புலம் சித்தி அரசு விநாயகர், நாட்டுமடம் மாரியம்மன் கோவிலில் அமைந்துள்ள விநாயகர், நாகை சாலை மருதமரத்து விநாயகர், ஞானவிநாயகர், புஷ்பவனம் புஷ்ப விநாயகர், ஆறுகாட்டுத்துறை விநாயகர் கோவில், வேதாரண்யேஸ்வரர் கோவிலில் உள்ள வீரகத்தி விநாயகர், நடுக்கம் தீர்த்த விநாயகர் உள்ளிட்ட பல்வேறு விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    செவ்வாய்க்கிழமையில் வரும் சங்கடஹர சதுர்த்தியான இன்று நாம் என்னென்ன செய்யவேண்டும் என்பதையும், அதனால் நமக்கு கிடைக்கின்ற அற்புதமான பலன்கள் என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.
    சங்கடஹர சதுர்த்தி விரதம் மாதத்துக்கு ஒருமுறை பௌர்ணமியில் இருந்து நான்காவது நாள் கடைப்பிடிக்கப்படும் விரதம். 'ஹர' என்றால் அழித்தல் என்று பொருள். சங்கடங்கள் அனைத்தையும் அழிக்கும் வல்லமை 'சங்கடஹர சதுர்த்தி' விரதத்துக்கு உண்டு. விநாயகரை வழிபட பல்வேறு விரதங்கள் இருந்தாலும், 'சங்கடஹர சதுர்த்தி' மிக முக்கியமானது. முதன்முதலாக கடைப்பிடிப்பவர்கள் ஆவணி மாதத்தில் தொடங்குவது நலம்.

    செவ்வாய்க்கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி சிறப்பான ஒன்று. இது, 'மகா  சங்கடஹர சதுர்த்தி' என்று அழைக்கப்படுகிறது.  திதிகளில் கடைப்பிடிக்கக்கூடிய இந்த விரதங்களைக் கடைப்பிடித்தால், இல்லத்தில் சுபிட்சம் உண்டாகும். சகல சௌபாக்கியமும் உண்டாகும். நாள்பட்ட  நோய்கள் குணமாகும். நீண்ட ஆயுள், நிறைசெல்வம், உண்டாகும். தோஷங்கள் நீங்கும்.

    செவ்வாய் கிழமை வரும் சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு விரதமிருந்து வழிபடுவதால் திருமணம் ஆகாமல் தாமதமாகும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூடிய விரைவில் திருமணம் நடக்கும். திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைப் பேறு கிடைக்கும். வீடு கட்டுவது, சொத்துக்கள் வாங்கல் போன்ற முயற்சிகளில் தடைகள் நீங்கி, வெற்றிகள் உண்டாகும். நீதிமன்றங்களில் இருக்கும் வழக்குகள் உங்களுக்கு சாதகமான தீர்ப்புகள் வர வழிவகை செய்யும்.
    சதுர்த்தியையொட்டி தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து கலந்து கொண்டு தெற்குமுக விநாயகருக்கு தேங்காய் மாலை சாத்தி 108 முறை வலம் வந்து வழிபாடு செய்கிறார்கள்.
    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் விலக்கு ஆர்ச் எதிரே உள்ள திசைமாறிய தெற்குமுக விசாலாட்சி விநாயகர் கோவிலில் மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்று வருகிறது. விநாயகருக்கு உகந்த சங்கடஹர சதுர்த்தி விழா, இந்த கோவிலில் 23-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

    விழாவுக்கு கோவில் நிர்வாகியும், பிரபல ஜோதிடருமான கரு.கருப்பையா தலைமை தாங்குகிறார். சதுர்த்தியையொட்டி தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து கலந்து கொண்டு தெற்குமுக விநாயகருக்கு தேங்காய் மாலை சாத்தி 108 முறை வலம் வந்து வழிபாடு செய்கிறார்கள். பொதுவாக விநாயகர் ஆற்றங்கரை, குளத்தங்கரை, மரத்தடியில் தான் காட்சியளிப்பார்.

    ஆனால் மடப்புரம் விலக்கு பஸ் நிறுத்தம் ஆர்ச் எதிரில் தெற்கு முகமாக விநாயகர் காட்சி அளிக்கிறார். இங்குள்ள விநாயகரை வழிபட்டால் கடன் தொல்லை, முன்னோர் சாபங்கள் நீங்கி திருமண தடை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
    ×